இளம் பெண்ணின் முடிவு !

நான் பட்ட படிப்பு முடித்தவன்
அவள் பள்ளிக்கூடத்தில் மேல் நிலை 2 மாண்டு படித்து கொண்டிருந்தாள்

பாடத்தில் சந்தேகம் என்னிடம்தான்
அருகருகே வீடு என்பதால்
என் வீட்டிற்கே புத்தகத்தோடு வந்து என்னிடம் பேசி கொண்டே படிப்பாள்

இதனால் நண்பர்கள் என்னை கிண்டல் பண்ண இதை அவளிடம் சொண்னேன்
அவள் சிரித்து கொண்டே அவர்கள் நமக்குள் இருப்பதைதானே சொண்னார்கள்
அதனால் என்ன உண்மை ஒரு நாள் ஊருக்கு தெரியதானே போகிறது பேசினால் பேசட்டும் என்றாள்

அவள் என்னை காதலிப்பதை சூசகமாக சொன்னாள்

அன்றுமுதல் நானும் அவளை காதலித்தேன்
ஆனால்
அதை வெளிபடையாக அவளிடம் சொல்ல வில்லை காரணம் அவள் வசதி மேன்மக்கள்
என் வீடு கூறை படிப்பிற்கு வாங்கிய கடன் கீழ்மக்கள் என பல காரணங்கள்
அவளும் காதலை வெளிபடையாக சொல்ல வில்லை

மௌனமாகவே எங்கள் காதல் தொடர்ந்தது

சில நாட்களாக அவள் என் வீட்டிற்கு வருவதில்லை என்னை பார்ப்பதில்லை
பேசுவதில்லை

ஓர்நாள் அவளிடம் கேட்டேன்
எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி
பன்னன்டாவாது படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் அண்ணா மாப்பிள்ளை குடும்பம் அவங்க ஊருலேயே பெரிய வசதி படைச்ச குடும்பம் அண்ணா
அதான் என் அப்பாம்மா யார் வீட்டுக்கும் போகத கண்டவங்க கூட பேசாத அப்படினுட்டாங்கண்ணா அதான் உன் கூட பேசலண்ணா என்றாள்

அவள் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றது என்னை
வெகுவாய் காய படுத்தியது

ஒரு மாதம் கழித்து சிங்கப்பூர் சென்றேன்
சில மாதங்களில் அவளை எண்ணி வெறுப்பதை கூட மறந்து விட்டேன் முதல் வருடத்தில் கடனை அடைத்தேன் இரண்டாம் வருடத்தில் வீடு கட்டினேன்
மூன்றாம் வருடம் அனுப்பின பணத்தில் அப்பா அருகே உள்ள நகரில் பன்பொருள் அங்காடி துவங்கினார்

மூன்று வருடம் கழிந்து முதன்முறை ஊருக்கு வந்தேன்

ஊரும் என் வீடும் மாறி இருந்தது

ஆனால் அவள் மட்டும் மாறவில்லை
பெண்டிராக மாறி இருக்க வேண்டியவள்
கல்யாணம் ஆகாமல் இருந்தாள்

அம்மாவிடம் அது பற்றி கேட்டேன்

மாப்பிள்ளை பெரிய இடம் என்பதால் அவர்கள் கேட்ட வரதட்சணை கொடுக்கல அதான் கல்யாணம் நடக்கல என்றார் அம்மா

ஒரு வாரம் நானும் அவளும் பார்வை மட்டும்தான்
அவளாக பேசினாள்

ஏன் பேச மாட்டிங்களா என்றாள்

எனக்கு வீட்டுல பெண் பாக்குறாங்க தங்கச்சி அதான் கண்ட பொம்பள புள்ளைங்க கூட பேசினா தங்கச்சி என் வீட்டுல திட்டுவாங்க தங்கச்சி என்றேன்

தயவு செஞ்சி தங்கச்சின்னு மட்டும் சொல்லாதிங்க என்றாள்

நீங்கதானே தங்கச்சி முதலில் அண்ணன் என்று கூப்பிட்டிங்க என்றேன்

ஏதோ சொல்ல வந்தவள்

அழுதவாறே அவள் வீட்டுக்கு ஓடி விட்டாள்.