கையில் கயிறு, நெற்றித் திலகம்… ஜாதி அடையாளமா?! முட்டாள்தன அறிவிப்பை திரும்பப்பெற்ற செங்கோட்டையன்!

sengottaian minister - 2026

சென்னை: தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் கலர் கலராக கயிறு, நெற்றியில் திலகம் அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு, ஹிந்து மத வெறுப்புடன் பயிற்சி எடுத்துக் கொண்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும், அதனால், தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறி, ஒரு சுற்றறிக்கை வெளியானது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை அடுத்து இந்த உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று கூறப் படுகிறது.

தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அண்மையில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருந்தது.

அந்த சுற்றறிக்கையில், பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டபோது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்றுகூடிக் கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிற கயிறு கட்டியிருந்துள்ளனர்.

மோதிரம் அணிந்தும் நெற்றியில் திலகமிட்டும் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என தங்களின் ஜாதி அடையாளத்தைக் காட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சுற்றறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, இணை இயக்குனர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

ஆனால், இத்தகைய சுற்றறிக்கை வெளியானதும், இந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்தன. இஸ்லாமிய கிறிஸ்துவ மாணவர்கள் மாணவிகள் உடை கலாசாரத்தை வெளியில் காட்டுகின்றனர், சிலுவையை வெளியில் தெரியும் வகையில் அணிந்து வருகின்றனர் அவர்கள் குறித்தெல்லாம் எதுவும் சொல்லப் படாததால், இது உள்நோக்கம் கொண்டது என்று கூறினர்.

இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலையே தொடரும் என தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது… பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டியிருப்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அதே நிலை தொடரும் .. என்றார்.

இந்நிலையில், யார் அந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்? அவர்கள் உள்நோக்கம் என்ன? ஏன் இத்தகைய கருத்துகளை அவர்கள் தெரிவித்தார்கள்? அவர்களின் பின்னணி என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்கள் அதிகாரிகளாக வந்தால், என்ன என்ன பிரச்னைகளை ஏற்படுத்துவார்களோ என்ற அச்சம் சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறித்து விசாரித்தறிய வேண்டும் என்று இப்போது சமூகத் தளங்களில் கோரிக்கைகள் வைக்கப் பட்டு வருகின்றன.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories