தீபாவளிக்கு ஊருக்குப் போகணுமா? முந்துங்க… பஸ்ஸுக்கு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
bus sengottai - 2026

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. www.tnstc.in,Redbus, paytm ஆகிய இணையதளங்களில், இவற்றுக்காக முன்பதிவு செய்யலாம்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக அரசு பஸ்களில் செவ்வாய்க்கிழமை இன்று (ஆக.27) காலை முதல் முன்பதிவு தொடங்கியது.

தீபாவளி பண்டிகை, அக்.27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையைக் கொண்டாட அக்.25 முதல் வெளியூர் செல்வோருக்கு வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் இன்று முன்பதிவை தொடங்கியது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சிறப்பு ரயில்களுக்காக ரயில் பயணியர் காத்திருக்கின்றனர்.

ரயில்களைத் தவிர்த்து அரசு விரைவுப் பேருந்துகளில் செல்ல விரும்புவோருக்கு இன்று முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் விடப் படும் என்றாலும், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, இன்று காலையே பலரும் பஸ்களில் புக் செய்ய தயாராகினர்.

அரசு பஸ்கள் மட்டுமல்லாது தனியார் ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்ய பயணிகள் பலர் காத்திருக்கின்றனர்.

பொதுவாக, அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, அக்., 25ஆம் தேதி சொந்த ஊர் பயணிக்க விரும்புவோர், இன்று, www.tnstc.in, Redbus,paytm இணையதளங்களிலும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.