teacher 6 - 2026

15 வயது மாணவன் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவமானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. துறையூருக்கு உட்பட்ட மருதை என்னும் கிராமத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் படிப்பதற்காக ஆதிதிராவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். அவருடைய சொந்த ஊர் செம்புசிலான்பட்டி. பள்ளியிலகருந்து 2 கீ.மீ தொலைவிலுள்ள இவரது ஊருக்கு பேருந்து வசதி எதுவுமில்லை.

திங்கட்கிழமை பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசிரியை நடந்து கொண்டிருந்தார். அப்போது இவர் பயிலும் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவன் அடர்ந்த வனப்பகுதியினுள் ஆசிரியையை மடக்கியுள்ளான்.

அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை பறிக்க முயன்றதோடு அல்லாமல், அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளான். அந்த ஆசிரியை அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து தன் ஊருக்கு சென்று பொதுமக்களிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார்.

கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதிதிராவிட திட்ட அலுவலரான ரங்கராஜு என்பவரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ரங்கராஜு அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். கிராமத்து பொதுமக்கள் ரங்கராஜுவிடம் சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரித்தனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதற்கு அவர் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து துறையூர் காவல்நிலையத்திலும் புகார் அளிக்குமாறும் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் ஒன்று திரண்டு துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இது போன்ற சம்பவங்களிலிருந்து பாதுகாப்பு தரவும் வலியுறுத்தினர். இந்த சம்பவமானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending