மோடி சீன அதிபர் சந்திப்பால் உலக நாடுகளில் ஒற்றுமை ஓங்கும்: தமிழிசை!

உள்ளூர் செய்திகள் சென்னை
thamizisai - 2026

சென்னை ரெட்டேரியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நடிகை வரலஷ்மி, திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தமிழிசை கணவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழிசை பேசும்போது, மகாத்மா காந்தியின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

thamilisai - 2026

காந்திக்கு அடுத்தபடியாக ஹீரோ, ஹீரோயின்கள் மாணவர்கள் தான். எனவும் பிரதமர் மோடி அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, செயலாற்றி வருகிறார்’ என்றார், பின் நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என கூறினார்.

தெலுங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது எனவும், தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்கிறது எனவும் தமிழிசை கூறினார். கடுமையாக உழைத்து தேச பற்று இருந்தால், ஆளுநராக அமரலாம் எனவும், கூறினார்.

24 ஆட்டோக்களையும், 800 பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகளையும், அயன் பாக்ஸ், 3 தையல் இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.

மோடி-சீன அதிபர் சென்னையில் சந்திப்பதால் உலக நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படும் என்ற அவர், காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.