கருவூர் தொழிற்பேட்டை சுப்ரமணியர் கோவிலில் சரஸ்வதி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்!

Published:

karur saraswathi pooja - 2026

ருவூர் தொழிற்பேட்டை சுப்ரமண்யர் சுவாமி கோவிலில் சரஸ்வதி ஹயக்கிரீவர் சிறப்பு வழிபாடு ஹோமம் யாகம் நடைபெற்றது!

கருவூர் தொழிற்பேட்டை ஆசிரியர் காலனி சுப்ரமண்யர் சுவாமி ஆலயத்தில் தனி சன்னதி கொண்டிருக்கும் சரஸ்வதி ஹயக்கிரீவருக்கு விஜய தசமி நாளான இன்று, தசமி திதியையொட்டி சிறப்பு கலசங்கள் வைக்கப்பட்டு ஹோமம் யாக வழிபாடு செய்யப்பட்டது.

கலசம் ஆலயத்தைச் சுற்றி வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

karur hayagriva saraswathi pooa - 2026

இந்த நிகழ்ச்சியில், 250 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப் பட்டன. இறை பிரசாதங்களை சிவாச்சாரியார் திலகம் சிவா வழங்கினார்.

செகந்நாதன், தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் ஆவண கார்த்திகேயன் மாரிமுத்து கோபால், கார்த்தி, ஆனிலை பாலமுருகன் மருதை.’ சுந்தர்ராஜ் ஸ்தாபகர் காளிமுத்து உட்பட திரளானவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பா.மருதை வழி நடத்தினார்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img