சீன அதிபருக்கு சிறப்பு வரவேற்பு! இரவு தமிழக விருந்து?

Published:

china feast - 2026

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இன்று இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகிறது. குறிப்பாக தக்காளி ரசம், அரச்சுவைத்த சம்பார் மற்றும் கவனரசி அல்வா உள்ளிட்டவை பரிமாறப்பட உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது.

நாளையும் சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள் . இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் ராஜாங்க ரீதியான விவகாரங்கள் பேசப்பட உள்ளது.

மதியம் 1.30 மணிஅளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் சென்னை வந்திறங்கினார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட காரில் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கு அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டு சென்றார்.

இன்று மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு காரில் புறப்பட்டு செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு சுமார் 6மணி நேரம் இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சுமார் 40 நிமிடம் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இதையடுத்து இரவு கிண்டியில் உள்ள ஹோட்டலுக்கு திரும்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இரவு உணவாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட உள்ளன. அவருக்கு இன்று இரவு உணவில், தக்காளி ரசம், அரச்சுவைத்த சம்பார், கடலை குருமா மற்றும் கவனரசி அல்வா உள்ளிட்டவை பரிமாறப்பட உள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img