
சென்னை ஆர்.கே.நகரில் பட்டம் விட மாஞ்சா நூல் பயன்படுத்தியதாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த இருவர் கைது.
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து, போலீஸார் தீவிரமாக மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும், 15 வயது சிறுவனையும் கைது செய்தது காவல்துறை!
நொறுக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா தடவிய நூல் அறுத்து, சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த காலங்களில், மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவங்கள் எத்தனை?
2006 – சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் உயிரிழப்பு!
2007 – வடசென்னையில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு!
2011 – சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமி உயிரிழப்பு!
2012 – அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரவாயலில் உயிரிழப்பு!
2012 – தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழப்பு!
2013 – சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள பாலத்தில் மந்தவெளியைச் சேர்ந்த ஜெயகாந்த் உயிரிழப்பு!
2015 – பெரம்பூர் பாலத்தில் பெற்றோருடன் சென்ற 5 வயது சிறுவன் அஜய் உயிரிழப்பு!
2017 – கொளத்தூரை சேர்ந்த சிவபிரகாசம், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸில் உயிரிழப்பு!
2019 - தாம்பரத்தில் 2 சிறுவர்கள் படுகாயம்; அறுவை சிகிச்சை செய்ததால் பிழைத்தனர்