பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நேற்றிரவு 9 மணி முதல் அக். 4-ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப் படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. திஷாமித்தல் தெரிவித்துள்ளார்.
வி.களத்தூரில் கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.




