திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிக உற்சாகம் காட்டி…. பிரதமர் மோடிக்காக புராதன நாணயங்களால் நினைவுப் பரிசு தயாரித்தளிக்க ஆர்வம் காட்டினார்கள்.
திருமலையில் தரிசனத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரத்தியேக காணிக்கை அளிப்பதற்கு முடிவெடுத்தனர் டிடிடி அதிகாரிகள்! ஆனால் ….அந்த விஷயம் வெளியே பரவியதால் பின்வாங்கிவிட்டனராம்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக திருமலை பாலாஜியை தரிசிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தார். அவருக்கு ஒரு அரிதான அன்பளிப்பு பரிசு அளித்து கௌரவிக்க டிடிடி அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக செய்தி கசிந்தது.
புராதன நாணயங்களால் அதனை தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு அது மீடியாவில் விவாதத்திற்கு இடமானது.
டிடிடி அதிகாரிகள் திருமலா மியூசியத்திலிருந்து 14ஆம் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன நாணயங்களையும் பலவித வடிவங்களில் உள்ள சில மாதிரிகளையும் பயன்படுத்தி ஒரு நினைவுப் பரிசை தயாரிக்கும் வேலையை வெளிநபர்களிடம் ஒப்படைத்தார்கள்.
இது தொடர்பாக சனிக்கிழமையே அவர்களிடம் நாணயங்களை ஒப்படைத்தது டிடிடி. அவற்றைக் கொண்டு அழகாக கண்ணைக் கவரும் விதமாக அன்பளிப்பு தயார் செய்து தரும்படி உத்தரவிட்டார்கள்.
ஞாயிறு அன்று பிரதமர் வரும்போது அவருக்கு அதை பரிசளித்து மிக உயர்ந்த பரிசாக தெரிவிக்க வேண்டும் என்று கருதியதாகத் தெரிகிறது.
ஆனால் மியூசியத்தில் இருக்க வேண்டிய விலை மதிப்பற்ற நாணயங்களை வெளியே எடுத்த விஷயம் மீடியாவுக்குத் தெரிந்து போனதால் டிடிடி பின்வாங்கி அந்த முயற்சியைக் கைவிட்டது என்கிறார்கள்.
முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் பாலாஜி தரிசனத்திற்கு திருமலை வந்தால் மகா துவாரம் வழியாக உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு நேராக தரிசனம் செய்விப்பார்கள். பின் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வசனம் செய்வார்கள். பின் டிடிடி ஈவோ, ஜூனியர் ஈவோ இருவரும் சேர்ந்து பாலாஜி படம், தீர்த்தப் பிரசாதம் கொடுப்பார்கள். அவற்றுக்கு மாறாக மோடிக்கு நினைவுப்பரிசு அளிக்க வேண்டும் என்று உற்சாகம் காட்டிய அதிகாரிகளின் முயற்சி இப்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.




