December 7, 2025, 3:08 AM
24.5 C
Chennai

உங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தைச் சொல்லுங்களேன்? கிரேசி மோகன் சொல்கிறார்.

உங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தைச் சொல்லுங்களேன்?

(பொறுத்தது போதும் மனோகரா… பொங்கி எழு’ ரேஞ்சில் கபாலியின் துவம்ஸத்தை என் பாட்டியிடம் புகார் செய்தேன்)_

கிரேசி மோகன் சொல்கிறார்.auhky 169886 1 - 2025

நான் பி.எஸ் பள்ளியில் எட்டாவது படிக்கும்போது என் வகுப்பில் கபாலி என்றொரு தாதா (எட்டாவதை எட்டாவது தடவையாக படித்துக் கொண்டிருக்கும் தாத்தா) இருந்தான். சிக்ஸ்-பேக், சிகரேட்-பேக் சகிதமாக ஆறடிக்கு ஓங்கி உலகளந்த அதமன் அவன். ‘பிற்காலத்தில் நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?’ என்று யாராவது பெருசு கேட்டால் நான் ‘கபாலியாகவே விரும்புகிறேன்’என்று கூறும் அளவுக்கு அவன் ஹீரோ.

அவன் சிக்ஸர் அடித்த டென்னிஸ் பந்துகள் புவி ஈர்ப்புக்கு சவாலாக இன்னமும் ஆகாசத்திலேயே உள்ளன. அந்தக் காலத்திலேயே பள்ளிக்கு ‘ஜாவா’ மோட்டார் பைக்கில் வந்து, ரஜினி ஸ்டைலில் வாசலில் இறங்கிக் கொள்வான். அந்த ‘ஜாவா’ கபாலிக்கு பயந்து… தானாகவே சென்று ஸ்டாண்ட் போட்டுக் கொண்டு சமர்த்தாக பார்க்கிங் செய்துகொள்ளும்.

கபாலிக்கு என் ஜியாமெட்ரி பாக்ஸில் ஒன்றரை கண். ‘தர மாட்டேன்’ என்று நான் சொல்ல, கபாலி என் வலது கையைத் துணி பிழிவது போல பின்பக்கம் திருப்பினான். நான் வலி தாங்காமல் கழுத்தை நிமிர்த்தி சூரியனைப் பார்த்தேன். பிஸியோதெரபி மாதிரி இந்த ‘பிழியோதெரபி’ எனக்கு தினமும் நடந்தது.

‘பொறுத்தது போதும் மனோகரா… பொங்கி எழு’ ரேஞ்சில் கபாலியின் துவம்ஸத்தை என் பாட்டியிடம் புகார் செய்தேன். மறுநாள் பாட்டி

கிளாஸ் ரூமுக்குள் வந்து தமிழ் வாத்தியாரிடம் கபாலியின் அட்டூழியத்தை அம்பலமாக்கிவிட்டாள். தமிழ் வாத்தியார் ‘இரணியன் வதம்’ நாடகத்தில் நரசிம்மராக மேக்கப் போடாமல் நடிக்கலாம். அப்படி ஆஜானுபாகுவாக இருப்பார் அந்த அழகிய சிங்கர். பரீட்சையில் பிட் அடித்தால் ‘பிட்டுக்கு மண் சுமக்க வைத்து பிரம்படி கொடுப்பார்’. கபாலியை இரு தொடைகளில் குப்புறக் கிடத்தி என் பாட்டிக்குத் திருப்தியாக கோட்டை கொத்தள அறை அறைந்தார்.

இத்தனை அடியிலும் கபாலி சொட்டு கண்ணீர்விடாமல் ‘தென் பாண்டி சீமையிலே… யாரடித்தாரோ யாரடித்தாரோ’ என்று என்னையே உற்றுப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்தான்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றால் எங்கே கபாலியால் ‘சிசுபால வதம்’ஆவேனோ என அஞ்சி, தினமும் பள்ளிக்குச் செல்வதாகக் கிளம்பிப் போய் சாந்தோம் பீச்சில் சாயங்காலம் பள்ளி விடும்வரை ‘கல்யாணப் பரிசு’ தங்கவேலு ஆபீஸ் போகிறேன் என்று பூங்காவுக்குப் போய்விட்டு வருவது போல, ஆறு மாதங்கள் போய்க் கொண்டிருந்தேன். என் பாட்டி கூட ‘‘என்னடாது… உன் ஷூவுல இவ்வளவு மண்ணு?’ என்று கேட்பாள்.

‘‘பையனை கபாலிக்கு பயந்து ஸ்கூல் மாத்திடேளா பாட்டி?’’ என்று தமிழ் வாத்தியார் கேட்க, மந்தைவெளி மார்க்கெட்டில் என் குட்டு அம்பலமானது.

சமீபத்தில் ஒரு சினிமா கதை விவாதத்துக்காக சாந்தோம் பீச்சுக்குச் சென்றபோது, அங்கே என் கையை முறுக்கிய கபாலி ‘கை முறுக்கு’ விற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். நெற்றி நிறைய விபூதியோடு கபாலீஸ்வரராக சாந்தமாகக் கபாலி காட்சியளித்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories