நகைச்சுவை நடிகர், நாடக எழுத்தாளர், திரை வசனகர்த்தா, மரபுக் கவிஞர் நாடக இயக்குநர் என கலைத்துறையில் பன்முகங்களை வெளிப்படுத்திய கிரேஸி மோகன் இன்று (வயது 66) மாரடைப்பால் காலமானார்.
நகைச்சுவையால் திரையுலகிற்கு வளம் சேர்த்தவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன்.
மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்து தமிழ் ரசிகப் பெருமக்களை வெகுவாகக் கவர்ந்தவர்.
கிரேஸி பிறந்தது 1952 அக்டோபர் 16ல். இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரி. இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக் கூடியவர் என்பதால் நாடகங்கள் மற்றும் சினிமாவிலும் நகைச்சுவையையே எழுத தேர்வு செய்தார்.
கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார்.
பின்னாளில் கமல்ஹாசனின் படங்களுக்கு வசனங்கள் எழுத தொடங்கினார். கமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தா.
“அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” என… இவரின் நகைச்சுவை மறக்க முடியாதது.
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயக்கி உள்ளார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த, “மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா” ஆகியவை பெரிதும் வரவேற்பு பெற்றவை.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரக்கும் மேற்பட்ட வெண்பாக்கள் இவரை இலக்கிய உலகில் நிலைநிறுத்தி இருக்கிறது.





திர௠கிரேசி மோகன௠அவரà¯à®•ள௠தன௠நகைசà¯à®šà¯à®µà¯ˆà®¯à®¾à®²à¯ எனà¯à®±à¯†à®©à¯à®±à¯à®®à¯ நமà¯à®®à®¿à®Ÿà¯ˆà®¯à¯‡ வாழà¯à®µà®¾à®°à¯. ஆனால௠மறà¯à®±à®µà®°à¯à®•ளை சிரிகà¯à®• வைதà¯à®¤à®µà®°à¯ à®à®©à¯ மாரடைபà¯à®ªà®¾à®²à¯ மரணிகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯? நகைசà¯à®šà¯à®µà¯ˆ அவரத௠ரதà¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ கலநà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯, அத௠அவரத௠ஆயà¯à®³à¯ˆ நீடிகà¯à®•விலà¯à®²à¯ˆà®¯à¯‡? வரà¯à®¤à¯à®¤à®®à¯ தானà¯.