மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்…. திருமண பத்திரிக்கை கூட ரெடி ….
இயற்கை சக்திகளை மகிழ்வித்து மழை பொழிவிக்க வேண்டு மென்றால் வருண யாகம் செய்வது, தவளைகளுக்கு திருமணம் செய்வது, ஊரைக் கூட்டி விருந்து அளிப்பது, கபடி ஆடுவது, பாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது வழக்கமாக உள்ளது .
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்று நம்புபவர்கள் உள்ளார்கள்.
தவளைகளுக்குத் திருமணம் செய்வித்தால் தேவேந்திரன் கருணை கொண்டு சோ வென்று மழை பொழிய வைப்பான் என்று இத்தகைய திருமணங்களை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு கூட பதிவு செய்யப்படுகிறது. புதிதாக கர்நாடகாவில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
தவளை திருமணத்திற்கு கிராண்டாக பத்திரிக்கை அடித்து விநியோகித்தார்கள்.
உடுப்பி மாவட்டம் நாகரீக சமிதி டிரஸ்ட் பஞ்சரத்ன சேவா டிரஸ்ட் முன்னின்று இதனை நடத்தியது.
உடுப்பி கிதியூர் ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணிக்கு மாருதி வேதிகாவிலிருந்து கல்யாண வீட்டார் ஊர்வலமாக கிளம்பினார்.
ஊர்வலம் பழைய டயானா சர்க்கிளிலிருந்து கவி முத்தணா மார்க்கம் வழியாக உடுப்பி கிதியூர் ஹோட்டலை வந்தடைந்தது. அதன்பின் தவளைக் கல்யாணம் நடந்தேறியது.
இந்து சம்பிரதாய சாஸ்திர முறைப்படி கல்யாணத்தை நடத்தினார்கள்.
தவளைகளுக்கு பெண் மாப்பிள்ளை அலங்காரம் செய்து தாலி கட்டி மாலை மாற்றி சப்தபதி எல்லாம் குறைவின்றி நடத்தினர்.
பெரிய அளவில் மக்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.




