மாப்பிள்ளை கிடைக்கல இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் பெற்றோர்.!

Published:

lady susid 2 - 2026

திருமணம் நிச்சயிக்கப்படாத வருத்தத்தினால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ளது செட்டிகுளம் என்ற ஊரில் அந்தோணி பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார்.

இவருடைய மகளின் பெயர் லீசா பெயர மாற்றப்பட்டுள்ளது. லீசாவின் வயது 25. இவருக்கு இதுவரை 2 முறை மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் 2 முறையுமே கைக்கூடவில்லை.

ALVA SUSID - 2026

மேலும் பலமுறை திருமண பேச்சுவார்த்தைகள் நடந்து ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளன.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற லீசா நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லீசா தூக்கில் தொங்குவதை கண்டு அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

dead bady 1 - 2026

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லீசாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண ஏக்கத்தில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது ஆழ்வார்க்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img