கரூரில் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி: களத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
karur dengue awareness - 2026

கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர், மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கரூர் நகராட்சியில் நாள்தோறும் ஒவ்வொரு பகுதிகாளாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெங்கமேடு அண்ணா காலணியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றதோடு, பள்ளி மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

karur dengue awareness vijayabhaskar - 2026

அப்போது திடீரென போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்தப் பணிகளை ஆய்வு செய்ததோடு, மாணவிகளுடன் இணைந்து தாமும் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுபட்டார். வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு, நிலவேம்பு குடிநீரையும் விநியோகித்தார்.

இந்நிகழ்ச்சியில் இனாம் கரூர் நகர செயலாளர் வெங்கமேடு பாண்டியன், நகர துணை செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.