
வரகு புலாவ்
தேவையானப் பொருட்கள் :
வரகு – 1 கப்
தண்ணீர் – 1 & 1/2 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
புதினா இலை – 12
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
நெய் – 2 மேஜைக்கரண்டி
பட்டை – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
செய்முறை:

ஒரு சிறிய குக்கரை சூடு செய்து, பட்டை, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து, வதக்கவும். வெங்காயம் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.
பொடியாக நறுக்கிய காய்களை சேர்த்து, புதினா மற்றும், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வரகை, களைந்து, தண்ணீரை வடித்து காயுடன் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும். தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
வெங்காய தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.