December 6, 2025, 4:04 AM
24.9 C
Chennai

தமிழ்நாடு – முன்னெடுத்தது யார்?

tamilnadu day copy - 2025

1.மாநில எல்லைகளைச் சீரமைப்பதற்காக பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை குறித்து 21.11.1955 முதல் 26.11.1955 வரை தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கொல்லங்கோடு , கொள்ளேகால், தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் சென்னை மாகாணத்தோடு இணைக்கப்பட வேண்டும் எனப் பேசினார் அப்போது திமுக சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.

2மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த போது (1956) தமிழ்ப் பேசும் பகுதிகளைத் தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்று குரலெழுப்பியவர் ம.பொ.சி. 1946 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று அவர் தமிழரசுக் கழகம் என்ற அமைபைத் தொடங்கினாலும் அது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தமிழ்ப் பண்பாட்டு இயக்கமாக, ஓர் உட்பிரிவாகத்தான் செயல்பட்டு வந்தது. காமராஜ் தலைவராக இருந்த போது காங்கிரசிலிருந்து ம.பொ.சி வெளியேறப்பட்ட பின்னர்தான் அது தனி அரசியல் அமைப்பாயிற்று. எனவே ம.பொ.சியைக் காங்கிரஸ்காரர் எனச் சொல்வதில் பிழை இல்லை

3.ம.பொ.சி.யின் போராட்டங்களால் உந்தப்பட்ட சங்கரலிங்கம், 1956 ஜூலையில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அவரும் காங்கிரஸ்காரரே. அப்போது முதல்வராக இருந்த காமராஜ் அந்தப் போராட்டத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 77 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு இறந்து போனார். இறக்கும் முன் தன் விருபங்களை எழுத்து மூலமாகத் தெரிவித்தது மயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் தலைவரிடம்

4. தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி, 30.1.61 அறப்போர் அறிவித்தார். டி.கே. சண்முகம், எம்.ஏ.வேணு, ஏ.பி. நாகராஜன், கா.மு.ஷெரீப், புலவர் கீரன் போன்றோர் பங்கெடுத்ததால் இது பெரும் கவனம் பெற்றது. இதில் 1700 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக இந்த அறப்போரில் பங்கெடுக்கவில்லை. ஆனால் ஆதரித்தது

5. இந்தப் போராட்டத்தை அடுத்து சட்டமன்றத்தில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். அதை ஏற்று பிப்ரவரி 24, 1961 சி.சுப்பிரமணியம் ” மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு சென்னை ராஜ்யம் என்று தமிழில் எழுதி வருகிறோம். இனித் தமிழில் எழுதும் போது சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அறிவித்தார்.

அதாவது அரசைப் பொறுத்தவரை 1961லிலேயே தமிழ்நாடு உருவாகி விட்டது!

அப்போது திமுக ஆட்சியில் இல்லை. ஆனால் திமுகவிற்குச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தீர்மானம் கொண்டுவரவில்லை.

இதைக் குறித்து அண்ணா ராஜ்ய சபையில் பேசியதாவது:
For the sake of informing this house, I may inform you, Sir, that on the 24th February 1961, the Leader of the House in the state assembly stood up to say that he was accepting part of the non-official resolution brought forward not by the DMK or any other political party which is considered to be inimical to the Congress but by a PSP member. That PSP member brought forward a non -official resolution for renaming Madras as Tamilnad and it was discussed for many days and finally the then Finance minister and the leader of the house Mr.C.Subramaniam stood up to say that he was accepting a part, or the spirit of the resolution and added that thereafter all the publications of Madras Government would appear in the name of Tamilnadu Government

6. அண்ணா இதைப் பேச வாய்ப்பளித்தது, ராஜ்யசபையில் கொண்டு வந்த ஒரு தனி நபர் மசோதா. அந்த தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்தவர் பூபேஷ் குப்தா என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். அண்ணா அப்போது ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தும் அவர் இது குறித்து மசோதாவோ, தீர்மானமோ கொண்டு வரவில்லை

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் செய்தவர்கள் யார் என்று இவற்றைக் கொண்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

  • மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories