144: 1 மணிக்கு மேல் வெளியில் சுற்றுபவர் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகம் பொது தகவல்கள்
police 3 - 2026

தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை கடைகள் திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவையும் மீறி பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர் இவர்களை கண்காணிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் பல ஆயிரக்கணக்கான வாகனங்களை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அலட்சியமாக வெளியே சுற்றித் திரியும் நபர்களை அடக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி 144 தடை உத்தரவை மீறி மதியம் 1 மணிக்கு மேல், வெளியே அனாவசியமாக சுற்றி திரிபவர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசாரால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என உத்தரவிட்டுள்ளார்

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.