நெல்லை எஸ்.பி.,யாக ஓம்ப்ரகாஷ் மீனா பொறுப்பேற்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
nellaisp omprakashmeena - 2026

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் ஓம் பிரகாஷ் மீனா.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண்சக்தி குமார் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பணியிட மாற்றலாகிச் செல்கிறார். இந்நிலையில் இன்று நெல்லை எஸ்.பி.யாக ஓம்பிரகாஷ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அருண் சக்தி குமார் வாழ்த்து தெரிவித்தார்.

nellaisp meena - 2026

நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்ற பின்னர் பேசிய ஓம்பிரகாஷ் மீனா, சட்டம் ஒழுங்கு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

மேலும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஜாதிய ரீதியிலான பிரச்னைகளை தடுக்க உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

24 மணி நேரமும் எந்த பிரச்னைகள் இருந்தாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.