பயணிகளோடு செல்லும் போது ஏ சி பஸ்ஸில் பற்றிய தீ! முழுதும் எரிந்து தீர்ந்தது!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
fire bus - 2026

சென்னையிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.சி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக் கொண்டு குமுளி நோக்கிச் சென்றுள்ளது.

செல்லும் வழியில் பொத்தேரி அருகே அந்த பேருந்தில் திடீரென தீ பற்றியுள்ளது. பதறிப் போன பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தில் தீ பற்றியதால் பேருந்திலிருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

உடனடியாக, ஓட்டுநர் அனைவரையும் பேருந்திலிருந்து கீழே இறங்கும் படி அறிவுறுத்தியுள்ளார். தீ மளமளவெனப் பேருந்தின் முன் பகுதியில் பரவியதால் பயணிகள் தங்களது உடைமைகளை விட்டு விட்டு கீழே இறங்கியுள்ளனர்.

fire bus 1 - 2026

பயணிகள் கீழே இறங்கியவுடனே, பேருந்து முழுவதும் தீ பற்றிக் கொண்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.மேலும், பேருந்து முழுவதும் பயணிகளின் உடைமைகள் உட்பட அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது.

அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தால் அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தின் என்ஜின் பகுதியில் தீ பிடித்ததால் தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.