குற்றால அருவிகளில் வெள்ளம்! குளிக்க தடை நீடிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
IMG 20191201 WA0021 - 2026

திருக்குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் அருவிக்கு நீர்வரத்து வரும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

இதை எடுத்து திருக்குற்றாலம் மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

இதனால் கடந்த சில நாள்களாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர் இன்று காலையும் அந்த தடை நீடிக்கிறது

தென்காசி மாவட்ட மழை அளவு
கடனா: 75 மி.மீ
ராம நதி: 64 மி.மீ
கருப்பா நதி: 16 மி.மீ
குண்டாறு: 61 மி.மீ
அடவிநயினார்: 12 மி.மீ
ஆய்குடி: 37.60 மி.மீ
சங்கரன்கோவில்: 22 மி.மீ
செங்கோட்டை: 54 மி.மீ
சிவகிரி: 10 மி.மீ
தென்காசி: 47.60 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.