கனமழை.. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
rain 1 - 2026

கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது .

தொடர் கனமழை காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலூர்-விடுமுறை: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கடலூர், கொளக்குடி கிராமத்தை விட்டு வெளியேற மறுத்த அனைவரும் பாதுகாப்பாக முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தை பொருத்த வரை பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்று ஆட்சியர் அன்பு செல்வன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி – நாளை விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை (2.12.19.) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் உத்தரவு

கனமழை காரணமாக குன்னுார் – மேட்டுப்பாளையம் மலை ரயில் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாளை விடுமுறை: கன மழை எச்சரிக்கை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.