‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
jayalalithaa 1 1 - 2026

ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் இன்று அஞ்சலி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று மலரஞ்சலி செலுத்துகின்றனர்.

காலை 9 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து மெரினா நோக்கி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக செல்கின்றனர். இதையொட்டி அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.