கரூரில்… திமுக.,வினர் 300க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் ஐக்கியம்!

Published:

admk vijayabaskar - 2026

கரூர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி & கலைஞர் பாசறை நிர்வாகிகள் சுமார் 300 நபர்கள் அதிமுக வில் ஐக்கியம்

தமிழக அளவில் திமுக கட்சியிலிருந்து தினந்தோறும் நாளுக்கு நாள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக கட்சிக்கு மாறும் மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பது கரூர் மாவட்டம் தான், ஏனென்றால் தற்போது அந்த திமுக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் செந்தில்பாலாஜி, இவர் ஏற்கனவே திமுக, மதிமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றெல்லாம் மாறி தற்போது மீண்டும் திமுக கட்சிக்கே மாறியது தான்!

மேலும், ஆளும் கட்சியாக அதிமுக இருந்த போது எம்.எல்.ஏ & அமைச்சர் பதவிகளை அனுபவித்து விட்டு, அப்போது ஏராளமான திமுக நிர்வாகிகள் மீது வழக்கு போட்டு விட்டு மீண்டும் அமைச்சர் பதவி அதிமுக வில் கொடுக்கவில்லை என்று கூறி, அந்த கட்சியிலிருந்து வெளியேறியவரும் கூட என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், ஒவ்வொரு நாளும் திமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்து வருகின்றனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான தினேஷ்குமார், கரூர் மாவட்ட கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பாளரும், தாந்தோணி நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் க.ஆனந்தன், ராமேஸ்வரப்பட்டி சதீஷ்குமார், சிவகுமார், கார்த்திக், முத்துக்குமார், தாந்தோணி நகர அமைப்பாளர் கலைஞர் பாசறை கார்த்திகேயன், கலைஞர் பாசறை செயற்குழு உறுப்பினர் பாலசந்திரன், 44 வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கோபிநாத், 47 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.கார்த்திக், 46 வது வார்டு பிரதிநிதி மகன் அஸ்வின், கலைஞர் பாசறை இணைச் செயலாளர் பா.மணிமாறன், பசுபதிபாளையம் டேவிட், ஈசநத்தம் கிளைக் கழக இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பசுவை பாலாஜி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கரூர் தெற்கு நகர அதிமுக செயலாளர் விசிகே.ஜெயராஜ் தலைமையில் கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மத்திய நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img