கோவில் விழாக்களுக்கு போலீசார் தடையை நீக்கக்கோரி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது
நெல்லை தென்காசி மாவட்டங்களில் இரவு நேரங்களில் கோயில் திருவிழாக்களுக்கு போலீசார் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரவு நேரங்களில் கோயில் விழாக்கள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் பெரும்பாலான கோயில் விழாக்களை நடத்த முடியாமல் கிராம மக்களும் பக்தர்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தடையை நீக்க கோரியும் முன்பு இருந்தது போல் இரவு நேரங்களில் கோவில் விழாக்களை தடையின்றி நடத்தவும் போலீசார் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் போலீசாரின் தடையை நீக்க கோரி நெல்லை தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் நிர்வாக குழு தலைவர் பி ஜெயச்சந்திரன் பொருளாளர் ஆர்.கே.பால்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டு தீர்மானம் வாசித்தனர்.