மீன் குழம்பு பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல்! தமிழக அரசியல் குறித்து ரஜினி!

rajini 5 - 2026

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி கொள்கைகள் குறித்துப் பேசினார்.

இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும். மக்களிடம் ஒரு எழுச்சி நிலை உருவாக வேண்டும். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உருவானால் பலம், அதிகாரம், ஆள் பலம் எல்லாம் தூள்தூளாகிவிடும்.

தமிழ் மண் புரட்சிக்குப் பெயர்போன மண். காந்தியடிகள் இங்குவந்துதான் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று விவேகானந்தர் இங்குவந்துதான் புரட்சியை ஏற்படுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் ஒரு மாநில கட்சி ஆட்சியில் இருந்ததது.

1960-70களில் நடந்த புரட்சி மீண்டும் நடக்க வேண்டும். மக்கள் அதிசயம், அற்புதத்தை நிகழ்த்த வேண்டும். அவர்கள் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்.

மக்கள் அவர்களது வருங்கால தலைமுறையினருக்காக இந்த புரட்சியைநடத்த வேண்டும். இது நடக்காமல் வாக்குகளைப் பிரிப்பதற்கு நான் வர வேண்டுமா? அது எனக்கு தேவையில்லை. புரட்சி நடக்க வேண்டும் என்பதை மூளை முடுக்கெல்லாம் சென்று அனைவரும் சொல்ல வேண்டும்’ என்றார்.

ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.

அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், “எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. நான் முதல் முதலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது டிசம்பர் 31, 2017ஆம் தேதிதான்,” என்றார்.

“நான் அப்போது பேசிய போது சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும்” என்றேன். மீன் குழம்பு “பாத்திரத்தில் சக்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடப்பது இருக்கும் ” என்று தெரிவித்தார்.

“திமுக அதிமுகவில் 50 ஆயிரத்துக்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளன. ஏன் இத்தனை பதவிகள் ? கல்யாணம் நடக்கும் போதுதான் சமையற்கலைஞர்களும், வேலை ஆட்களும் தேவை. மற்ற நேரங்களில் தேவை இல்லை. அதுபோலத்தான் அரசியலும். தேர்தல் நேரத்தில்தான் கட்சிப் பதவிகள் தேவை. நான் அதற்காக உங்களை வேலை ஆட்கள் என சொல்லவில்லை” என்றார்.

அதிகளவில் கட்சி பதவிகள் இருந்தால் ஊழல்தான் நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“என்னால் முதல்வர் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நான் கட்சி தலைவர்தான். ஆட்சி தலைவர் இல்லை. அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவர், நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன்” என்று மாவட்ட செயலாளர்களை சந்தித்தப் போது விவாதித்தேன். ஆட்சியில் நான் தலையிட மாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்.” என்றார்.

“அது போல 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவேன் என்று கூறினேன். இவர்களிடம் மட்டுமல்லாமல், இது குறித்து நான் பலரிடம் விவாதித்தேன் ” என்றார்.

“ஆனால், பெரும்பாலானவர்கள் நான் சொன்னதை ஒப்புக் கொள்ளவில்லை. மாற்றதைக் கூட ஒப்புக் கொள்கிறோம். ஆனால் நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என்று கோரினார்கள். நான் மற்றவர்களிடம் இது குறித்து பேசுங்கள், இதனை புரியவையுங்கள் என்றேன் ” என்று கூறிய அவர், “தலைவன் சொல்வதை தொண்டன் கேட்கவேண்டும். தொண்டன் சொல்வதை எல்லாம் தலைவன் கேட்க வேண்டிய தேவையில்லை,” என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

50 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து, 60லிருந்து 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் ஒய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விருப்பம் இருந்தால் இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

“காந்தி மாறியது இங்குதான். விவேகானந்தர் கர்ஜனை செய்த பூமி இதுதான். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சி செய்த பூமி இது. அது போல ஒரு புரட்சி மீண்டும் வர வேண்டும்.” என்றார்

வாக்கை பிரிக்க நான் வர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், “எனக்கு 71 வயது. பிழைத்து வந்திருக்கிறேன். இப்போது ஆட்சியை பிடித்தால்தான் உண்டு, அடுத்த தேர்தலில் எல்லாம் பார்த்து கொள்ள முடியாது,” என்றார்.

மேலும் தேர்தல் வரை மட்டுமே கட்சிகளுக்காக உழைப்பார்கள் . கட்சி பதவிகளை சிலர் தொழிலாகவே வைத்துள்ளனர். மேலும் தேவையில்லாத பதவிகள் ஏராளமாக உள்ளன. மேலும் வெற்றி பெறுபவர்கள் தங்களுக்கு வேண்டிய சொந்தக்காரர்களுக்கு மட்டுமே தேவையான அரசு டெண்டர்களை கொடுத்து வருகின்றனர்.

எனவே அரசியல் மாற்றத்திற்கு நான் 3 திட்டங்களை வைத்துள்ளேன்.

1) நமது அரசில் தேவையுள்ள பதவிகளை மட்டுமே வைத்துக் கொள்ளப்படும். கட்சிக்கு தேவையான பதவிகள் மட்டுமே வைத்துக் கொள்ளப்படும்.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

2) குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

3) மேலும் கட்சிக்கு ஒரு தலைவர் ஆட்சிக்கு ஒரு தலைவர் என்பதே நமது கட்சியின் முக்கிய கொள்கை.

மேலும் முதல்வர் பதவிக்கு நான் இதுவரை ஆசைப்பட்டதே இல்லை.

நமது கட்சியில் தேர்ந்தெடுக்கும். முதல்வர் நாங்கள் சொல்வதை கேட்கவில்லையென்றால் உடனே தூக்கி எறியவும் தயங்க மாட்டோம்.

நமது கட்சியில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளை பயன்படுத்துவோம்.

நமது கட்சியில் பதவிக்கு ஆசை படுபவர்கள் கட்சிக்கு வர வேண்டாம்.

அரசியலில் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் அண்ணா.

அசுர பலத்துடன் உள்ள திமுக அதிமுகவை நாம் எதிர்த்து நிற்கிறோம்.

அரசியல் தலைவர்களுக்காகவே மக்கள் வாக்களித்து வந்தனர்.
இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாகினால் மட்டுமே அசுரபலம் கொண்ட கட்சிகளை தோற்கடிக்க முடியும்.

திமுகாவை பொறுத்தவரை கலைஞருக்காகவே மக்கள் வாக்களித்தனர். ஸ்டாலினுக்காக அல்ல.

திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை அவரிடம் ஆள்பலம், பணம் பலம் உள்ளது.

நான் வருங்கால முதல்வர் என சொல்வதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும்.

அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்பதே ஒரே முழக்கமாக இருக்க வேண்டும் . இவ்வாறு கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories