கொரோனா வார்டில் வேலை செய்ய மறுத்த பெண் ஊழியர்! தற்கொலைக்கு முயற்சி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
sanitizer - 2026

விழுப்புரத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்து ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் சில பகுதிகளில் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரொனா வார்டில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் தான் இனி கொரோனா வார்டில் பணிபுரிய முடியாது என கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு மேல் அதிகாரிகள் மறுத்ததால் மனமுடைந்த அவர் அங்கிருந்த சானிட்டைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவருக்கு உடனடியாக மீட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.