கொரோனா: மருத்துவர் மரணம்! உடல் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
dead body corono - 2026

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை எரிக்க அம்பத்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அரசு மருத்துவமனையில் 60 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கை அம்பத்தூர் மயானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால், இதற்கு அம்பத்தூர் மயானம் பகுதி சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தங்களுக்கும் கொரோனா ஏற்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
கொரோனா கிருமி பரவாது என்று போலீசார், சுகாதாரப் பணியாளர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மக்கள் அதை ஏற்க முன் வரவில்லை.

இதைத் தொடர்ந்து அவரது உடலை திருவேற்காடு மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரா என்ற தகவல் தெரியவில்லை.
ஆனாலும், கொரோனாவை தடுக்கும் பணியில் மருத்துவர்கள்தான் தற்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மக்களின் இந்த செயல் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.