தொட்டிலில் விளையாடிய சிறுவன்! கயிறு கழுத்தில் இறுக்கி பரிதாப மரணம்!

உள்ளூர் செய்திகள் சென்னை
ezhumbur
எழும்பூர்

சென்னை எழும்பூர் பி.சி.ஓ சாலையில் வசித்து வருபவர் அப்துல் ஹாதி. இவரது பேரன் முகமது தெக்கி. 6 ஆம் வகுப்பு படித்து வரும் தெக்கியின் தந்தை துபாயில் பணிசெய்து வர முகமது தெக்கி தாத்தா மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த 1 மாத காலமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. இதனால் முகமது தெக்கி கடந்த 20 ஆம் தேதி வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிலின் கயிறு கழுத்தை இறுக்கியதில் முகமது தெக்கி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அவரது தாய் உடனே தெக்கியை சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேத்துபட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21ஆம் தேதி சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் தெக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், முகமது தெக்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.