இறைச்சி வாங்க வந்த 13 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்! இளைஞர் சமீம் போக்சோவில் கைது!

Published:

vankodumai 1 - 2026

தொடர் ஊரடங்கு காரணமாக இறைச்சி வாங்க சென்ற 8-ஆம் வகுப்பு மாணவிக்கு வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பீதியில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக ஆய்வு தகவல் வெளியானது.

இதனையடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வீட்டிற்கு இறைச்சி வாங்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அருகேயுள்ள கோழி இறைச்சி கடைக்கு கறி வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் சமீம் என்ற இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பிச்சென்று நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இறச்சிக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமீம் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு இறச்சி வாங்கச் சென்ற சிறுமிக்கு கடக்காரர் பாலியல் தொல்லை அளித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img