கொரோனா: பெரிய மேட்டில் ஒரே தெருவில் 8 பேருக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
corono 6 - 2026

சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது. அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உள்பட 4 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் மிக அதிக அளவாக சென்னையில் பாதிப்பு உள்ளது.

சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அந்த தெரு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 10 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.