குட்டீஸ் விரும்பும் சீஸ் கார்ன் தோசை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
chees-corn-dosa
chees-corn-dosa

சீஸ் கார்ன் தோசை
தேவையான பொருட்கள்

தோசை மாவு – தேவையான அளவு
வெண்ணெய். – 3 மே.க
வேக வைத்த இனிப்பு சோளம் -3 மே.க
குடைமிளகாய்
காய்ந்த மிளகாய் துகள்கள் -காய்ந்த மிளகாயை அரைக்கும் ஜாடியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்
சீஸ் வில்லைகள் -2 மே.க
சாட் மசாலா. 2 மே.க
நறுக்கிய கொத்தமல்லி -தேவையான அளவு
செய்முறை
தோசை கல்லில் எண்ணெய் தடவி மெல்லிய தோசையாக வார்க்கவும்

தோசை சிறிது வெந்ததும் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவவும். பின் வேக வைத்த சோளம், குடைமிளகாய்,காய்ந்த மிளகாய் துகள்கள், நறுக்கிய கொத்தமல்லியை தூவவும்.

அதனை தொடர்ந்து சாட் மசாலா மற்றும் தேவையான அளவு சீஸ் துருவி சேர்த்து கொள்ளவும்

தோசை வெந்து சீஸ் உருக ஆரம்பிக்கும் போது தோசை யை இரண்டாக மடித்து நறுக்கி கொள்ளவும். அருமையான சீஸ் கார்ன் தோசை தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.