நாளை முதல் மீண்டும்… டாஸ்மாக்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
tasmac 3 - 2026

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நாளை முதல் டாஸ்மாக் இயங்குகிறது! இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்தி வெளியீட்டில்…

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு மதுபான கடைகள் மே 16 நாளை முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது

உச்சநீதிமன்ற ஆணையை தொடர்ந்து மதுபான கடைகள் மே 16 நாளை முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது. மேலும் மால்கள் வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இந்த கடைகள் இயங்காது.

மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

tasmac tomoro - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.