அலோபதியிலிருந்து…ஹோமியோபதிக்கு படையெடுக்கும் மக்கள்!

Published:

homeopathi clinic
homeopathi clinic
  • மதுரையில் ஹோமியோபதி மருத்துவமனையை நாடும் மக்கள்
  • அலோபதியிலிருந்து…ஹோமியோபதிக்கு படையெடுக்கும் மக்கள்

மதுரை: மதுரையில் அலோபதியிலிருந்து, ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் தனியாக கிளினிக்கில் மருத்துவம் பார்ப்பதில்லையாம்.

இதனால் பொதுமக்கள் பலர் மருத்துவ சிகிச்சையை பெற அறுவை சிகிச்சையை தவிர, ஏணைய மருத்துவத்துக்கு ஹோமியோபதி மற்றும் ஆயூர்வேத, நாட்டு மருந்து சிகிச்சைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அரசும், கொரோனாவுக்கு கபசுரகுடிநீர், சிங் மாத்திரைகள், சித்தா மாத்திரைகள் உட்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், சளி மாத்திரைகள், கால்பால், பாரசிட்டம்மாள், காப்சிரப்புகள் வழங்க மறுத்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறதாம்.

அதற்கு அலோபதி மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனராம். இந்தக் காலக் கட்டத்தில் தனியாக கிளினிக் நடத்தி வரும் மருத்துவர்களை பொதுமக்கள் அணுக முடியவில்லை. காரணம் , தனியாக வைத்திருந்த கிளினிக்குகளை கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மருத்துவர்களும் மூடிவிட்டனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அரசு மருத்துவமணைகளில், கொரோனாவை தவிர மற்ற சிகிச்சைகள் குறித்து ஆலோசணை பெறவும், ரத்த அழுத்தம் மற்றும் இதர சிகிச்சைகள் குறித்து ஆலோசிக்க போதிய மருத்துவர்கள் இல்லையென்றார், சோழவந்தான் பூ மேட்டுத் தெருவைச்சேர்ந்த கருப்பையா தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் கால் வலி, அலர்ஜி, தலைவலி, உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிதளுக்கு வேறு வழியின்றி ஹோமியோபதி, சித்தா மருத்துவமனைகளை ஏராளமானோர் நாடத் தொடங்கியுள்ளனர். இதனால், ஹோமியோபதி மருத்துவமனைகளில் வருகின்ற மக்களுக்கு முகக் கவசம் அணிந்து, சமூக பரவலை கடைபிடித்து மருத்துவ சிகிச்சையை தொடங்கிவிட்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img