கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
manonmaniyam university

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.