நெல்லை to சென்னை: கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
accident

நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளானதால் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

நேற்றிரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு கார் சென்றது. கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் அந்த பகுதியில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான கார் டாடா சுமோ கார் என்றும், இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் சாலையில் இருந்த 2 பேர் படுகாயமடைந்ததாகவும், காயம் அடைந்த அந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.