அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில் உள்ளது. இக்கோயிலில் முற்றிலும் திருப்பணி நிறைவுற்று கடந்த 8ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் முதற்கால யாகவேள்வி முதல்கால பூஜை நடந்தது அதனை தொடர்ந்து நான்காம்கால பூஜை நடந்தது.

அதனை தொடர்ந்து புனிதநீர் கடங்களை எடுத்து கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்து கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது இந்தவழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது யாக வேள்விகளை சுப்ரமணியபுரம் பால சுப்ரமணிய குருக்கள்செய்தார். ஏற்பாடுகளை களக்குடி கிராமத்தார்கள் செய்தனர்.

விழாவை முன்னிட்டு அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.