அறந்தாங்கி
அறந்தாங்கியில் திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு செய்தார்.
அறந்தாங்கியில் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள காவல் உதவி மையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் டிஎஸ்பி ஜெயசீலன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . கேமரா ஆய்வின்போது அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்,அறந்தை ரோட்டரி முன்னாள் தலைவர் தங்கத்துரை,ரோட்டரி நிர்வாகிகள் சரவணன் பன்னீர்செல்வம் செந்தில்வேலன்,சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.அதனை தொடர்ந்து அறந்தாங்கி டிஎஸ்பி அலுவலகம் காவல்நிலையம் ஆகியவற்றில் டிஐஜி ஆனி விஜயா ஆய்வு செய்து டிஎஸ்பி அலுவலகத்தில் மனுதாரர் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டு காவலர் குடியிருப்பு பகுதிகளையும் பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது எஸ்பி பாலாஜி சரவணன் டிஎஸ்பி ஜெயசீலன் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் சப் இன்ஸ்பெக்டர்கள் அறந்தாங்கி சிவக்குமார் இளமாறன் சாந்தி ரேஸ்மா நாகுடி ராசேந்திரன் ஏம்பல் துரையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
