தமிழகத்தில் தொடரும் வருமான வரி சோதனை: இன்று 33 இடங்களில்!

Published:

இந்த மாதம், தமிழகத்தில் ரெய்டு மாதம் என்று சொல்லும் அளவுக்கு, சசிகலா தொடர்பானவர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. அதன் பின்னர் இன்று காலை துவங்கி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சசிகலா குடும்பத்தினரிடம் நடந்த சோதனையை தொடர்ந்து நடக்கும் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

பட்டேல், மார்க், மிலன், கங்கா ஆகிய நான்கு குழுமங்களைச் சேர்ந்த அலுவலகங்கள் இல்லங்களில், 33 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் 21 இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள 12 இடங்களிலும் சோதனை நடக்கிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் சிட்டிபாபு, செந்தில் ஆகியோரது வீடு மற்றும் அவர்களது குழுமத்திற்கு இடங்களில் ரெய்டு நடந்து வருவதாக தெரிகிறது.

மேலும், சத்யம் சினிமாஸிலும் சோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஜாஸ் சினிமாஸ் வாங்கப் பட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதாகத் தகவல் வெளியானது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img