தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு; ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகள்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை டவுன் – மேலப்பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் இந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி பகுதியில் கம்பிகள், மின் கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் சுசீந்திரம் பாலம் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.