ஆய்வாளர் பெரிய பாண்டியன் மறைவுக்கு இந்து முன்னணி அஞ்சலி

குற்றவாளியை பிடிக்க சென்று பலியான காவல்துறை அதிகாரி
பெரிய பாண்டியன் அவர்களுக்கு
இதயபூர்வமான அஞ்ச

லி செலுத்துதாக இந்துமுன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெரிய பாண்டியன் குற்றவாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் காயமடைந்துள்ளார்.
எந்த மாநிலம் ஆனாலும், குற்றவாளிகளை பாதுகாப்போர் தேச விரோதிகள் தான். குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதும், திருட்டுப்பொருட்களை மீட்பதும் காவல்துறை அதிகாரிகள் கடமை. காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை ஊடகங்களும், நடுநிலை அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும். இதுவே, ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ஒரு குற்றவாளியை தனது தற்காப்பிற்காக சுட்டதாகக் கூறியபோது, மனிதபிமானம் பேசியவர்களே, காவல்துறை ஆய்வாளர் உயிரும் மனித உயிர்தானே? ஏன் மவுனம் காக்க வேண்டும். தமிழகத்திலும் குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை தாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. புழல் சிறை முதல் ஆம்பூர் முதலான பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுவரை வாய் திறந்து கண்டிக்க முன் வரவில்லை என்பது வருத்தமான விஷயம். குற்றவாளியை பாதுகாக்கும் ஒரு வன்முறை கூட்டம், சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் காவல்துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட கொடுமை, இதனை காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாநில அரசோ கவலையோடு அணுகி, தீர்வு காண முற்படுவதில்லை என்பதுதான்.
சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும் என்பது சரி. அதே சமயம், குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசப்போய் தான் குற்றவாளிகள் தைரியமாக இதுபோன்ற பயங்கரவாத செயல்களை செய்யவும் துணிகிறார்கள்.
குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்போரையும் ஈவுரக்கமின்றி உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காது.
கடமையை செய்ய சென்று பலியான பெரிய பாண்டியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் விரைந்து குணமடைய தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இரு காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கவும், இது போல் இனிமேல் நடவாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய உதவிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories