குளத்திற்கு சென்ற சிறுவன்! நேர்ந்த பரிதாபம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
river
river

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தியாகு என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராம குரு மற்றும் ஸ்ரீ சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ஸ்ரீ சங்கர் அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் 4 பேரும் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ சங்கர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டான்.

மேலும் அவனுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனைப் பார்த்த நண்பர்கள் அவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் ஸ்ரீ சங்கர் தண்ணீரில் மூழ்கி விட்டான். இந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சங்கரை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஸ்ரீ சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.