திடீரென வெடித்து மின்சாரப் பெட்டி! மாமனாருக்கு நெஞ்சுவலி.. மணமகள் மயங்கி விழ.. களேபரமான திருமண மண்டபம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
marriage
marriage

சென்னை வியாசர்பாடி பகுதியில் அமைந்திருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றிருக்கின்றன.
நிகழ்வின்போது மின்கசிவு காரணமாக மின்சார பெட்டி வெடித்து சிதறி இருக்கிறது.

இதில் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடியிருக்கின்றனர்.

பின்னர் மண்டபத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர் . இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆன பின்னரும் கூட தொடர்ந்து வியாசர்பாடி – மூலக்கடை சாலையில் திருமணத்திற்கு வந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மணமகனின் தந்தைக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அனைவரும் பதறிப்போய் நின்ற அந்த நேரத்தில் மணமகள் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார்.

இதையடுத்து இருவரையும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.