ஒரே இரவில் 23 பேரை கடித்த தெரு நாய்கள்! பீதியில் சென்னை மக்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
dogs
dogs

சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று ஒரே இரவில் 23 பேரை நாய்கள் கடித்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் நாய்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இதுகுறித்து தண்டையார்பேட்டையில் உள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை அவர்களின் அலட்சியத்தால் தண்டையார்பேட்டை மட்டுமல்லாது வ.உ.சி. நகர், புதுவண்ணாரப்பேட்டை, ஜெ ஜெ நகர், சேனி அம்மன் கோவில் தெரு, பெரியார் நகர், தண்டையார்பேட்டை ஆதிதிராவிடர் தெரு ஆகிய பகுதிகளிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் அந்த பகுதியில் நடந்து செல்வோர், சிறுவர்கள், பெரியவர்கள், ஆகிய அனைவரையும் நாய்கள் கடிப்பது தொடந்துவந்துள்ளது. அவ்வகையில் நேற்று ஒரே இரவில் தண்டையார்பேட்டையில் 23 பேரை நாய் கடித்தது அவர்கள் அரசு சின்ன ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இதற்குப் பின்புதான் மாநகராட்சி அலுவலர்கள் நாய்கள் இருக்கும் பகுதிக்கு சென்று அங்குள்ள நாய்களை பிடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே இரவில் 23 பேரை நாய்கள் கடித்ததால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் சிறிது பதற்றத்துடன் இருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.