கழிவறை கட்டிதரவில்லை: ஓட்டு கேட்காதே தேர்தலை புறக்கணிப்போம்.. பதாகை ஏந்திய மக்கள்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
kovai 2 - 2026

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் ‘ஓட்டு கேட்டு உள்ளே வராதே. என்று கிராம மக்கல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கடந்த 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வராதீங்க என்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கோவை ஒண்டிபுதூர் மக்கள் நடத்தி வருகின்றனர்.

kovai1 - 2026

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியில் ஆஞ்சநேயர் காலணி உள்ளது. இங்கு பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும் என்பது இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பொதுக்கழிப்பிடம் இல்லாததால் இங்குள்ள இளம் பெண்கள், வயதானவர்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர்.

எனவே தற்போது தங்கள் பகுதியில் பொதுக் கழிப்பறை அரசு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய வேட்பாளர்கள் யாரும் அதனை நிறைவேற்றவில்லை. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.

1,500 வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ‘ஓட்டு கேட்டு உள்ளே வராதே. என்ற வாசகம் பொறித்த பதாகைகளை ஏந்தி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.