மசாஜ் சென்டரில் நடந்த பாலியல் தொழில்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன்
ayurvedic-massage-center
massage-center

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஓட்டல் மாடி கட்டிடத்தில் ஸ்பா செயல்பட்டு வருகிறது. இதில் ஆயில் மசாஜ் மட்டுமின்றி விபசாரம் நடப்பதாக புகார் வந்தது.

சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையிலான போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்த கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (34), அன்னூர் புதுப்பள்ளியை சேர்ந்த நவ்னித் (24) ஆகியோரை கைது செய்தனர்.

ஆயில் மசாஜ் செய்வதாக கூறி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தகவல் தெரிவித்து இவர்கள் ஆட்களை வரவழைத்துள்ளனர். இவர்களிடம் இளம்பெண்களை காட்டி, ஜாலியாக உல்லாசமாக இருக்கலாம், இதற்கான இட வசதி செய்து தருகிறோம் எனக்கூறியுள்ளனர்.

ஆசை பேச்சுக்கு மயங்கும் நபர்களை விபசார பெண்களுடன் அனுப்பி பணம் வசூலித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவினாசி ரோடு லட்சுமி மில் பகுதியில் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். தங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். நீங்கள் வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனக்கூறி அவ்வழியாக சென்ற இளைஞர்களை அழைத்தனர்.

இது குறித்து பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீஸார் விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்களான சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (50), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் விபசார பெண்களை ஓட்டலில் தங்க வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் சேலம், மைசூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.