மின்சாரம் தாக்கி +2 மாணவன் உயிரிழப்பு!

Published:

shock
shock

கோவை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை அடுத்த பி.என்.புதூர் ஸ்ரீநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்திரகிரி. இவரது மகன் தரணீஸ்வரன் (16). இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுமுடக்கம் காரணமாக தரணீஸ்வரன், வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் உள்ள மின்சார வயரில் எதிர்பாராத விதமாக தரணிஸ்வரனின் கைப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை பெற்றோர், மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தந்தை பத்ரகிரி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img