Dhinasari Home page

மின்சார ரயில் சேவையில் சனி ஞாயிறு மாற்றம்…

சற்றுமுன்

பிப்26,27 சனி‌ மற்றும் ‌ஞாயிறு பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.10 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25, 11.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி(நாளை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 26-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக 27-ந் தேதி மட்டும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படும். மேலும், அன்று பூங்கா – செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே காலை 4.20 மணி முதல் இரவு 11.20 மணி வரை 61 மின்சார ரெயில் சேவைகளும், திருமால்பூர், செங்கல்பட்டு – பூங்கா இடையே காலை 3.55 மணி முதல் இரவு 11.55 மணி வரை 62 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.

கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 9.40 மணி, வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 27-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து, சென்னையில் மீண்டும் வழக்கம்போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வார நாட்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 202 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ‌இருநாட்கள் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.