தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை நால்வர் பலியாகினர்.
வெடி விபத்தில் பலியான கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சி மகன் ராமர் மற்றும் பொய்யாமொழி மகன் தங்கவேல், தொட்டம்பட்டி, பசுவந்தனையைச் சேர்ந்த குட்டையன் மகன் ஜெயராஜ், நாலாட்டின்புதூரைச் சேர்ந்த வெள்ளச்சாமி மகன் மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
தலா ரூபாய் மூன்று இலட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.





