16 வயது சிறுமியை கடத்தி சென்ற ட்யூசன் மாஸ்டர்!

Published:

tution master
tution master

கோவையில் டியூஷன் நடத்துவது போல் நடித்து சிறுமியை மயக்கி கடத்திச்சென்ற காதல் மன்னனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நபரிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமி திடீரென மாயமானார் . இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சம்மந்தப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஏற்கனவே இரண்டு முறை திருமணமான அந்த காதல் மன்னன் மூன்றாவதாக ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இதன் பின்னர், அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கோவா சென்றுவிட்டு அவரிடம் இருந்த பணத்தை சுருட்டிக்கொண்டு கோவையில் வந்து பதுங்கியுள்ளான்.

அவன் தங்கியிருந்த பகுதிதியில் தான் ஒரு டியூஷன் மாஸ்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளான். இதனை நம்பி 16 வயது சிறுமி அவனிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

தற்போது அந்த சிறுமியை மயக்கிய கடத்திச் சென்றது தெரியவந்தது. அந்த ஆசாமியின் வாகனம் பல்லடத்தில் ஒரு வாகன நிறுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. விரைவில் அவனை பிடித்துவிடுவோம். என்றனர்.

இதனிடையே மாயமான சிறுமியின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 18 வயது நிரம்பாத ஒரு சிறுமியின் புகைப்படத்தை இவ்வாறு வெளியிடுவது தவறு என்றும், நல்ல நோக்கத்துக்காக இருந்தாலும் எந்த நேரத்திலும் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img